Wednesday, December 17, 2025 3:09 pm
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமளிக்கும் வகையில் ஓய்வூதியம் வழங்குவதற்கான கால அவகாசத்தை டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இவ் விடயம் விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விவசாயிகள் டிசம்பர் மாதம் முழுவதும் அரச வேலை நாட்களில் தமக்குரிய தபால் நிலையங்கள் அல்லது உப தபால் நிலையங்கள் ஊடாகத் தமது ஓய்வூதிய பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக விவசாய ஓய்வூதியம் ஒவ்வொரு மாதமும் 9 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை வழங்கப்படும்.
எனினும் , பேரிடர் காரணமாக தபால்நிலையங்களுக்குச் செல்லும் வீதிகள் சேதமடைந்துள்ளதால் ஏற்படும் போக்குவரத்துச் சிரமங்களைக் கருத்திற்கொண்டு கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
தற்போது 178 , 753 விவசாயிகள் விவசாய ஓய்வூதிய நன்மைகளை பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாது டிசம்பர் மாத ஓய்வூதியக் கொடுப்பனவிற்காக 413 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை அறிவித்துள்ளது.

