Wednesday, December 17, 2025 2:27 pm
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளின் நுழைவுச்சீட்டுக்களின் விலைகள் தொடர்பான விமர்சனங்களை தொடர்ந்து, 60 அமெரிக்க டொலர் விலையிலான மலிவு விலை நுழைவுச்சீட்டுக்களை ஃபிபா அறிமுகப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
104 போட்டிகளுக்கும் குறைந்த விலையிலான நுழைவுச்சீட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கால்பந்து சங்கத்திற்கும் ஒதுக்கப்படும் நுழைவுச்சீட்டுக்களில் 10 வீதம் இந்த ஆதரவாளர் நுழைவு அடுக்கு எனும் குறைந்த விலைப்பிரிவின் கீழ் வரும்.
மொத்த ஒதுக்கீட்டில் 50 வீதம் மலிவு விலையிலும் மீதமுள்ள 50 வீதம் ஸ்டாண்டர்ட் மற்றும் பிரீமியர் பிரிவுகளாகவும் பிரிக்கப்படும்.
இந்த நுழைவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் பொறுப்பு அந்தந்த நாடுகளின் கால்பந்து சங்கங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தகுதியான ரசிகர்களைத் தெரிவு செய்வதற்கான விதிகளை அந்தந்த சங்கங்களே தீர்மானிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

