Wednesday, December 17, 2025 12:16 pm
அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக வைத்தியர்கள் உட்பட ஏனைய பணியாளர்களும் இணைந்து இன்று புதன்கிழமை (17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அண்மையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையிலிருந்து பொலிஸாரால் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. இதனால் வைத்தியசாலையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
இதனால் அச்சுறுத்தலுக்குள்ளாகிய பணியாளர்கள் தமக்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து தருமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பல அசளகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

