Tuesday, December 16, 2025 4:29 pm
தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் எனக் கூறிய அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து வெளிநாட்டு பயணத்தடையும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் 26ம் திகதி ,குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது சுமண ரத்ன தேரர் வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும் என தெரிவித்தார்.
இதையடுத்து குறித்த வன்முறையான கருத்துக்கு எதிராக கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி தனுக்க றனஞ்சக முறைப்பாடு செய்ததுடன் , சிவில் மற்றும் அரசியல் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழுள்ள சட்டத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த மாதம் சட்டமா அதிபர் திணைக்களம் தேரரை கைது செய்யுமாறு உத்தரவிட்டது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது தேரர் நீதிமன்றில் சமூகமளிக்காததால் தேரரை கைது செய்வதற்காக பிடியாணை பிறப்பித்து அவருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் நீதவான் விதித்துள்ளார்.

