Tuesday, December 16, 2025 1:55 pm
பாரிய அனர்த்தத்தின் மத்தியிலும் இந்த ஆண்டில் நாட்டை வந்தடைந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 2 இலட்சத்தை கடந்துள்ளது என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுற்றுலா அமைச்சின் தகவல்படி , நேற்று திங்கட்கிழமை (15) வரை 2 ,208,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் , நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் 22 ,033 ரஷ்யர்கள் 27 ,166 இந்தியர்கள் மற்றும் 9 ,763 பிரித்தானிய பிரஜைகள் அடங்குவதாக தரவுகள் வெளியாகியுள்ளது.
இதேவேளை , கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 102,545 ஆகப் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உலக சுற்றுலாத் தளத்தில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது போன்ற சுற்றுலாப் பயணிகளின் வருகை நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதைக் காட்டுகிறது.

