Tuesday, December 16, 2025 10:16 am
1982 ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளரான டி.எஸ். டி சில்வா தனது 83 வது வயதில் லண்டனில் காலமானார்.
இவர் 2009ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தேசிய அணியின் முதல் குழுவைச் சேர்ந்த வீரரான டி.எஸ். டி சில்வா , இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு இலங்கை அணிக்குத் தலைமை தாங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தனது பதவிக் காலத்தில் நாடு முழுவதும் பல சர்வதேச கிரிக்கெட் மைதானங்களை மேம்படுத்துவதிலும் அவற்றை நிறைவு செய்வதிலும் டி சில்வா முக்கிய பங்கு வகித்தார்.
தனது விளையாட்டு வாழ்க்கைக்குப் பிறகு , பயிற்சியாளர் , அணி மேலாளர் மற்றும் தேசிய தேர்வாளர் உள்ளிட்ட பல பதவிகளில் தொடர்ந்து பணியாற்றினார்.
சமூக ஊடகப் பதிவில் டி சில்வாவை மிகவும் மதிக்கப்படும் நிர்வாகி என்று வர்ணித்து நேர்மைக்கு பெயர் பெற்றவர் என கிரிக்கெட் கொமான்டர் ரோஷன் அபேசிங்க, பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

