Saturday, December 13, 2025 4:38 pm
2025 ஆம் ஆண்டின் மிகவும் கண்கவர் விண்கல் பொழிவு இன்று சனிக்கிழமை (13) இரவு வானில் தென்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை விண்வெளி விஞ்ஞானியும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இந்த விண்கல் பொழிவு “ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவு” (Geminids meteor shower) என அழைக்கப்படும் .
அந்தவகையில் ஒரு மணி நேரத்தில் சுமார் 150 விண்கற்கள் தெரியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இவ் ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவு மற்ற விண்கல் மழைகளைப் போலல்லாமல் வால் நட்சத்திரத்தின் எச்சங்களிலிருந்து உருவாகாமல் , 3200 பேதான் (Phaethon) எனப்படும் சிறுகோளின் சிதைவிலிருந்து உருவானது.
சிறந்த வருடாந்த விண்கல் மழைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஜெமினிட் விண்கல் பொழிவை இலங்கை மக்கள் இன்று இரவு காண முடியும்.
மேகமூட்டமில்லாமல் வானம் தெளிவாக இருக்கும் இடங்களில் தொலைநோக்கிகள் இல்லாமல் வெறும் கண்ணுக்கே இந்த எரிகல் தென்படும். இயற்கையாகத் தோன்றும் அற்புதமான வான வேடிக்கையாக இந்த எரிகல் மழை அமையுமென வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவு இந்த ஆண்டின் மிகவும் சிறந்த விண்கல் மழைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

