Friday, December 12, 2025 2:13 pm
விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சப்புகஸ்கந்த பகுதியில் நேற்று இரவு அசோக ரன்வல பயணித்த ஜீப், கார் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் காரில் இருந்த ஒரு பெண்ணும், ஒரு சிறு குழந்தையும் காயமடைந்துள்ளனர்.
விபத்துக்குள்ளான பெண் கிரிபத்கொட மருத்துவமனையிலும், சிறு குழந்தை லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவும் சிகிச்சைக்காக கிரிபத்கொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் விபத்து நடந்த நேரத்தில் மதுபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் குடிபோதையில் இல்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும்நிலையில் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சப்புகஸ்கந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

