Friday, December 12, 2025 10:31 am
இன்று (12) முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனைத்து மதுபான உரிமக் கட்டணங்களும் 100 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
இது கடந்த மாதம் 5 ஆம் திகதி ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவின் படி உள்ளது.
நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வருடாந்திர கலால் வரி , பாதுகாப்பு வைப்புத் தொகை மற்றும் தொழில்துறை அணுகலுக்கான ஒரு முறை கட்டணம் ஆகியவை அதற்கேற்ப அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி , 2025 ஜனவரியில் இலங்கையில் மதுபான வரி 6% ஆக அதிகரிக்கப்பட்டு, விலைகள் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் , கலால் கட்டளைச் சட்டத்தின் பிரிவின் கீழ் ஒவ்வொரு உரிமதாரரும் உரிய திகதியில் அல்லது அதற்கு முன் வரி செலுத்த வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

