Thursday, December 11, 2025 4:48 pm
பல்வேறு திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் உள்ள 2 ,284 அரச சேவையின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதி வழங்குவதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அமைச்சுக்கள் , மாகாண சபைகள் மற்றும் ஆணைக்குழுக்களில் நிலவும் 2 ,284 வெற்றிடங்களுக்காக புதிதாக ஆட்சேர்ப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அந்தந்த அமைச்சுகளின் கீழ் உள்ள திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் நிலவும் பதவிகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக குறித்த குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு , 14.11.2025 அன்று நடைபெற்ற குழுவின் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின் படி , பின்வரும் ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்காக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் ,



