Thursday, December 11, 2025 3:50 pm
“GOAT TOUR” எனப்படும் மூன்று நாள் கொண்டாட்டத்திற்காக ஆர்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இந்தியாவிற்கு பயணிக்கவுள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் 13, 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை, டெல்லி ஆகிய நான்கு நகரங்களுக்கு மெஸ்ஸி பயணம் செய்யவுள்ளார்.
தனது பயணத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பல மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பல பிரபலங்களையும் மெஸ்ஸி சந்திப்பார் எனக் கூறப்படுகிறது.
அவர் பங்கு கொள்ளும் நிகழ்வுகளுக்கான டிக்கெட்டுகளின் விலை சுமார் 4,500 இந்திய ரூபாவில் இருந்து தொடங்குகிறது.

