Thursday, December 11, 2025 1:01 pm
இந்துக்களின் முக்கியமான பண்டிகையான தீபாவளிப் பண்டிகையை மனிதகுலத்தின் கலாசார பாரம்பரியத்தின் பிரதிநிதித்துவப் பட்டியலில் யுனெஸ்கோ அதிகாரபூர்வமாகச் சேர்த்துள்ளது.
இந்தியாவின் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெற்ற யுனெஸ்கோவின் முக்கியக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தீபாவளி பண்டிகை யுனெஸ்கோவின் பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப்பட்டதை வரவேற்று, இந்திய பிரதமர் நரேந்திர மோடி “இது தீபாவளியின் உலகளாவிய புகழுக்கு மேலும் பங்களிக்கும்” என எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இது இந்தியாவின் பதினாறாவது கலாசார அம்சமாக யுனெஸ்கோவின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இதற்கு முன்னர் கும்பமேளா,கொல்கத்தாவின் துர்கா பூஜை, குஜராத்தின் கர்பா நடனம், யோகா மற்றும் வேத மந்திரங்களின் பாரம்பரியம் உள்ளிட்ட 15 அம்சங்கள் இந்த மதிப்புமிக்க பட்டியலில் உள்ளன.

