Thursday, December 11, 2025 12:30 pm
அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்கள் அமெரிக்காவில் வசிக்க விரைவான அனுமதியைப் பெறுவதற்கான பாதையை வழங்குவதற்காக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் “ட்ரம்ப் தங்க அட்டை” (Trump Gold Card) விசா திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டம் குறைந்தபட்சம் 1 மில்லியன் டொலர் செலுத்தக்கூடிய வெளிநாட்டினருக்கு விரைவான அமெரிக்க விசாக்களை பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.
இதன்மூலம் வெளிநாட்டவர்களை அமெரிக்காவில் வசிக்கவும் வேலை செய்யவும் அனுமதி அளிக்கிறது.
ட்ரம்ப் தனது நிர்வாகத்தின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளை, விரைவான நாடுகடத்தல்கள் முதல் சட்டப்பூர்வ பாதைகளை கட்டுப்படுத்துவது வரை தீவிரப்படுத்தி வரும் தருணத்தில் இந்த வெளியீடு வந்துள்ளது.

