Wednesday, December 10, 2025 10:24 am
அனர்த்த நேரத்தில் இலங்கையுடன் கைகோர்த்தமைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்
ட்ரம்பிற்கு நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி அர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அவர் இதனை தனது எக்ஸ் தளத்திலேயே குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட பேரிடர்களின் போது அமெரிக்கா C-130 விமானத்தை அனுப்பி வைத்ததுடன்
அவசர உதவியாக 02 மில்லியன் டொலர்களை வழங்கியது.
டித்வா சூறாவளியினால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டு இருந்த காலகட்டத்தில் அவர்களுக்கான அவசரகால நிவாரண முயற்சிகளை மேற்கொள்ள அமெரிக்கா சுமார் 2 மில்லியன் அமெரிக்க அடாலர்களை டொலர்களை வழங்கியுள்ளது.
இந்த உதவிகள், இரு நாடுகளுக்கு இடையேயான நீடித்த கூட்டாண்மையின் வலிமையையும், இரு நாட்டு மக்களிடையேயான நெருங்கிய உறவுகளையும் பிரதிபலிக்கின்றன என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மேலும் ,அமெரிக்காவின் இந்த மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரண நடவடிக்கைகளுக்குப் பெரும் பலமாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

