Tuesday, December 9, 2025 8:00 pm
நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்ச்சியான போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது, பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 868 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 869 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்போது, 193 கிராம் கொக்கேயின் போதைப்பொருளும், 642 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 01 கிலோ 229 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 275705 கஞ்சா செடிகளும், 01 கிலோ 007 கிராம் மாவா போதைப்பொருளும் , 433 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 01 கிலோ 084 கிராம் ஹசீஸ் போதைப்பொருளும், 8070 போதை மாத்திரைகளும், 59 மதனமோதக மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் 06 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

