Tuesday, December 9, 2025 12:09 pm
ILT20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகின்றது.
6 அணிகள் மோதும் குறித்த இத் தொடரானது, எதிர்வரும் ஜனவரி 04 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
குறித்த தொடரில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பெத்தும் நிசங்க கொல்ஃப் ஜெயண்ட்ஸ் (Gulf Giants) அணிக்காக விளையாடுகின்றார்.
இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை (08) நடைபெற்ற டெசர்ட் வைப்பர்ஸ், கொல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் பெத்தும் நிசங்க தனது மூன்றாவது அரைசதத்தை பெற்றுள்ளார்.
இந்தப் போட்டியில், 29 பந்துகளில் 56 ஓட்டங்களை பெத்தும் நிசங்க பெற்றுள்ளார்.
அதிக ஓட்டங்கள் எடுத்த வீரரான பெத்தும் நிசங்க, இதுவரை 3 போட்டிகளில் 204 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

