Tuesday, December 9, 2025 10:11 am
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காக பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளை (BNMF) அரசாங்க நிவாரண நிதிக்கு சுமார் 250 மில்லியன் நன்கொடையினை அளித்துள்ளது.
இவ் நன்கொடை நிதியை பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வழங்கியுள்ளார்.
இந்த நிதியின் முக்கிய நோக்கம் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்கு நிவாரணம் மற்றும் ஆதரவை வழங்குதலாகும்.
மேலும் ,புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி மற்றும் பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளையின் இயக்குநர்கள் , குழு உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

