Monday, December 8, 2025 12:36 pm
டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மியன்மாரில் இருந்து நிவாரண பொருட்கள் அடங்கிய மியான்மார் விமானப்படையின் (Y8) விமானம் காட்டுநாயக்க விமானப்படை தளத்தை வந்தடைந்தது.

இந்த விமானத்தில் அத்தியாவசிய மற்றும் மருத்துவ பொருட்கள் என்பன அடங்குகின்றது. மியான்மருக்கான இலங்கைத் தூதர் மார்லர் தான் ஹ்தைக், மியான்மர் அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் திரு. சாவ் பியோ வின் மற்றும் அரசாங்க பிரதிநிதிகள் குழு ஆகியோர் இந்த ஒப்படைப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர். இலங்கை விமானப்படையின் திட்டமிடல் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் தேசப்ரிய சில்வா மற்றும் விமானப்படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

