Monday, December 8, 2025 10:12 am
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய தேசிய பாதுகாப்பு உத்தியை ரசியா வரவேற்றுள்ளது, இது “மாஸ்கோவின் தொலைநோக்கு பார்வையுடன் பெரும்பாலும் ஒத்துப்போகிறது” (largely consistent” with Moscow’s) என்று கூறியுள்ளது.
அமெரிக்க அரசாங்கம் கடந்தவாரம் வெளியிட்ட 33-பக்க அறிக்கையில், ஐரோப்பா “நாகரீக அழிப்பை” எதிர்கொள்கிறது என்றும் ரசியா, அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் அல்ல என்ற தொனியிலும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நியுஸ்விக் (newsweek) என்ற ஆங்கில செய்தித் தளம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு செல்வாக்கை எதிர்த்துப் போராடுவது, மக்கள் இடம்பெயர்வை நிறுத்துவது மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் “தணிக்கை” நடைமுறையை நிராகரிப்பது ஆகியவை அறிக்கையில் ஏனைய முன்னுரிமைகளாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
ஆனால் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தை ஏற்றுக் கொண்டதாக கூறமுடியாது.
அமெரிக்காவின் இந்த மூலோபாய அறிக்கை ரசியாவை நோக்கி ஒரு மென்மையான பார்வையைக் கொடுக்கிறது. ரசிய உக்ரெயன் மோதல் பற்றிய விவகாரங்களில், ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது அறிக்கை குற்றம் சுமத்துகிறது.
மேற்கத்திய அடையாளத்தை மீட்டெடுப்பதற்கும் அழைப்பு விடுக்கிறது, மேலும் ஐரோப்பா 20 அல்லது அதற்கும் குறைவான ஆண்டுகளில் அடையாளம் காணமுடியாது மற்றும் அதன் பொருளாதார சிக்கல்கள் “நாகரீக அழிப்பின் உண்மையான மற்றும் மிகவும் வெளிப்படையான வாய்ப்புகளால் மறைந்துவிடும் என்றும் அறிக்கை கூறுகிறது.
அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியச் செல்வாக்கை குறைத்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் செல்வாக்கையும் ரசியா மீதான நம்பிக்கையையும் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதநிதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அறிக்கையில் ஐரோப்பாவை புகழ்ந்தும் தாழ்த்தியும் அமெரிக்க தேசிய பாதுப்பை மாத்திரம் வலியுறுத்தியும் வாக்கியங்கள் அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டபபட்டுள்ளது.
இந்த அறிக்கை முற்று முழுதாக ஏற்கக் கூடியதல்ல. ஆனால் பரிசீலிக்கப்பட்டு ஐரோப்பிய ஒன்றியத்தை பாதிக்காத முறையில் அறிக்கை அமைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

