Sunday, December 7, 2025 11:16 am
இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொள்ளாயிரமாக அதிகரித்துள்ளது. நூற்றுக்கும் அதிமானோர் காணாமல் போய்யுள்ளதாக அமெரிக்காவின் ஏஎப்பி (AFP) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் மலாக்கா நீரினையில் சக்திவாய்ந்த சூறாவளி உருவானபோது 100,000 இற்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டன, இது தென்கிழக்கு ஆசியாவில் சில பகுதிகளில் பலத்த மழை மற்றும் மண்சரிவுகளை ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
இந்தோனசியாவின் சில பகுதிகள் மண்சரிவு மற்றும் வெள்ளத்தினால் துண்டிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் உதவிக்கு விமானங்கள் அனுப்பப்பட வேண்டும்.
இந்தோனேசியா வெள்ளம் சமீபத்தில் ஆசியாவைத் தாக்கிய பல தீவிர வானிலை நிகழ்வுகளில் ஒன்றாகும், இலங்கை, தாய்லாந்து, மலேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் மொத்த இறப்பு எண்ணிக்கை சுமார் இரண்டாயிரத்தை கடந்துள்ளது.
இந்தோனேசியாவின் கடுமையான பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஒன்றான ஆச்சே தமியாங் பிரதேசத்தில் வேகமாக நகரும் மண்சரிவு வெள்ளங்களினால் பல கிராமங்கள் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டதாக உயிர் பிழைத்தவர்கள் விவரித்துள்ளனர்.
மக்கள் தங்கள் வீடுகளின் மேல் அமர்ந்து உயிர் பிழைத்ததாக லிண்டாங் பாவா கிராமத்தில் உயிர் பிழைத்த ஒருவர் இந்தோனேசிய பிபிசி சேவையிடம் தெரிவித்துள்ளார்.
நான்கு வயது குழந்தைகளுடன் தங்கள் வீடுகளின் கூரையில் மூன்று நாட்கள் சாப்பிடாமல் அல்லது குடிக்காமல் உயிர் பிழைத்தவர்களும் உள்ளதாகவும் அவர் கூறினார்.
தனது கிராமத்தில் சுமார் 90% வீடுகள் அழிந்துவிட்டதாகவும், 300 குடும்பங்கள் எங்கும் செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
தனது வீட்டில் இரண்டாவது மாடி வரை வெள்ளத்தில் மூழ்கியபோது, அவரும் அவரது குடும்பத்தினரும் படகில் எப்படி வெளியேற்றப்பட்டனர் என்பதை மற்றொருவர் விபரித்தார்,
அதேவேளை வெள்ளம் மண்சரிவுகளில் இருந்து உயிர் தப்பி முகாம்களில் வாழும் பலர் பட்டினியுடன் இருப்பதாகவும், அவர்களுக்கு உணவு நிவாரணங்கள் கிடைக்கவில்லை என்றும் இந்தோனேசிய செய்திகள் தெரிவிக்கின்றன.
வெளிநாடுகளில் இருந்து உதவிகள் கிடைத்தாலும் அவற்றை பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு கொண்டு செல்ல முடியாவிலலை என்றும், விமானம், ஹெலிகொப்டர்களில் மாத்திரமே உணவுகளை வழங்கக் கூடியதாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

