Saturday, December 6, 2025 4:39 pm
நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடரினால் மக்களின் மரண எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று சனிக்கிழமை (06) வெளியிட்ட சமீபத்திய அறிவிப்பின்படி, 213 பேர் காணாமல் போயுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதனால் 576,626 குடும்பங்களைச் சேர்ந்த 2,054,535 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அவர்களில் 33,622 குடும்பங்களைச் சேர்ந்த 114,126 பேர் 956 பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
4,309 வீடுகள் முழுமையாகவும், 69,635 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் மிக அதிகளவிலான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

