Monday, December 8, 2025 3:17 pm
சர்வதேச சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் புதிய தலைவராக பேராசிரியர் தவம் தம்பிப்பிள்ளை பொறுப்பேற்றுள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்வில் அவர் தனது பதவியைப் பொறுப்பேற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் கைதடியில் பிறந்த தவம் தம்பிப்பிள்ளை, மருத்துவ உலகில் நன்கு அறியப்பட்டவராகக் காணப்படும் அதேவேளை, தற்போது அமெரிக்காவின் சான்போர்ட் மருத்துவமனையில் உறுப்பு மாற்று சத்திரசிகிச்சை நிபுணராகவும் பணியாற்றி வருகிறார்.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சிகிச்சை திட்டம் ஆரம்பிக்க முக்கிய நபராக இவர் விளங்குகிறார்.
அமெரிக்க மருத்துவ உதவி நிதியத்தின் உறுப்பினராக கடந்த 20 ஆண்டுகளாக இலங்கையில் பல தொண்டுப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
பேராசிரியர் தவம் தம்பிப்பிள்ளை சர்வதேச சத்திர சிகிச்சை நிபுணர்கள் அமையத்தின் (International College of Surgeons) உலக அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


