Saturday, December 6, 2025 3:42 pm
இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் தமிழக அரசு சார்பில் சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் இருந்து கப்பல் மூலம் 950 தொன் நிவாரணப் பொருட்கள் இன்று சனிக்கிழமை நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை மக்கள் இந்த துயரில் இருந்து மீண்டு வரும் வகையில் தமிழக அரசு துணைநிற்கும் என்றும், துயருறும் மக்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்களை வழங்கிட அதிகாரிகள் குழுவை அமைக்கிறோம் என்றும் அவர்கள் மீண்டெழுந்திடத் துணை நிற்போம் என்றும் தமிழக முதலமைச்சர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் சென்னை துறைமுகத்தில் இருந்து இன்று நிவாரண பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.



