Saturday, December 6, 2025 12:34 pm
இந்த வருடம் உலகம் முழுவதும் அதிகமாக தேடப்பட்ட விளையாட்டு அணிகளின் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டது.
அதன்படி, 2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்த தேடல் முடிவுகளை கூகுள் வெளியிட்டுள்ள நிலையில் , பஞ்சாப் கிங்ஸ் அணி உலகளவில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளதாக தெரிய வருகின்றது.
இதேபோல் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. ஐபிஎல் போட்டியில் இதுவரை கிண்ணத்தை வெல்லாத அணிகளாக உள்ள இந்த இரண்டு அணிகளை பயனர்கள் கூகுளில் அதிகமாக தேடியுள்ளனர்.
இந்த இரு அணிகளும் கிண்ணத்தை வெல்வதற்காகக் கடுமையாகப் போராடியதால் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
விராட் கோலி, எம்.எஸ்.தோனி போன்ற ஜாம்பவான்கள் இருந்த போதிலும் அவர்கள் இடம்பெற்றுள்ள அணி கூகுள் தேடலில் முதலிடத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

