Saturday, December 6, 2025 11:31 am
மன்னார் பேசாலை கடற்கரையில் கடந்த 30 ஆம் தேதி அரிய கடல் பாலூட்டியான டுகோங் (டுகோங் டுகோன்) கரை ஒதுங்கியதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
8 அடி 2 அங்குல கொண்ட ஆண் டுகோங் முதலில் உள்ளூர் மீனவர்கள் மற்றும் கடற்படையினரால் கவனிக்கப்பட்ட நிலையில் பின்னர் வனவிலங்கு அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டது.
டுகோங்கின் அடிப்பகுதியில் காயங்கள் ஏற்பட்டிருந்தது. இந்த மீன் கரையொதுங்குவதற்கு சுமார் இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரிய கடல் பாலூட்டி பாதுகாக்க வேண்டிய பட்டியலில் காணப்படுகின்றது.

