Saturday, December 6, 2025 11:58 am
இலங்கைத்தீவில் டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட நாட்டு மக்களுக்கு உதவ மாலைதீவும் முன்வந்துள்ளது.
ஏற்கனவே அமெரிக்கா , இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் நாட்டுக்கு உதவியுள்ளன.
இந்நிலையில் மாலைதீவு 25000 டின்மீன்பெட்டிகள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
14 கொள்கலன்களில் அடைக்கப்பட்ட இந்த டின்மீன் தொகை நேற்று பிற்பகல், மாலைதீவு உயர் ஸ்தானிகரால் இலங்கை அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் செயல்பாட்டு பணிப்பாளர் பிரிகேடியர் ரொஷான் தர்மவிக்ரம, மேற்கு கடற்படைப் பகுதியின் பிரதிப் பிராந்தியத் கட்டளை அதிகாரி கொமடோர் அருண விஜேவர்தன மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் டயனா பெரேரா ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியமான உணவுப் பொருட்களை வழங்குவது உள்ளிட்ட அரசாங்கத்தின் நிவாரண திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் மாலைதீவு அரசாங்கம் இந்த நன்கொடையை வழங்கியுள்ளது.
மேலும் , இரு நாடுகளுக்குமிடையிலான அன்பை பகிர்ந்து கொள்ளும் நெருங்கிய சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளதாகவும் மாலைதீவு குறிப்பிட்டுள்ளது.

