Saturday, December 6, 2025 12:35 pm
ஜேவிபியை மையப்படுத்திய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் 157 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 158 வாக்குகள் பெறப்பட்டன. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்குபற்றாமல் வெளிநடப்புச் செய்தனர். ஒருவர் மாத்திரமே எதிர்த்து வாக்களித்தார்.

