Friday, December 5, 2025 7:50 pm
இந்திய தேசிய அனர்த்த மீட்புப் படையினர் (National Disaster Response Force- NDRF) ஒப்பரேசன் சாகர் பந்து (Operation Sagar Bandhu) நடவடிக்கையை நிறைவு செய்து கொண்டு இன்று வெள்ளிக்கிழமை இலங்கைத்தீவை விட்டு வெளியேறினர்.
இலங்கைத்தீவில் டித்வா புயலினால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கவும், மண்சரிவுகளில் சிக்குண்ட மக்களை மிட்கவும் கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு வந்திருந்தனர்.
இலங்கை இராணுவத்துடன் நெருக்கமாக ஒத்துழைத்து பணியாற்றிய இந்திய தேசிய அனர்த்த மீட்புப் படையினர், இலங்கைத்தீவின் தலைநகர் கொழும்பு மற்றும் மலையகப் பிரதேசங்களில் அதிகளவு பணியாற்றியிருந்தனர்.

