Thursday, December 4, 2025 3:26 pm
யாழ்ப்பாணம் – தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாக இன்று வியாழக்கிழமை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், குறித்த போராட்ட களத்தில் இருந்த கூடாரங்கள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளன.
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தியும், திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி, அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குமாறு கோரியும் இந்த போராட்டம் ஒவ்வொரு பெளர்ணமி தினத்தில் நடைபெற்றுவருகின்றது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் இணைந்து மாதாமாதம் முன்னெடுக்கும் தொடர் போராட்டம் நேற்றும் இன்றும் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
