Tuesday, December 2, 2025 1:52 pm
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையை கருத்தில் கொண்டு அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களை அதிகாரசபை கேட்டுக்கொள்கிறது.
அதன்படி, அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் தொடர்பான முறைப்பாடுகளை மாவட்ட மட்டத்தில் நிறுவப்பட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபை அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் , நியாயமற்ற விலையில் பொருட்களை விற்பனை செய்பவர்களிடம் ஏமாற வேண்டாம் என நுகர்வோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

