Tuesday, December 2, 2025 1:24 pm
நாட்டில் நிலவி வரும் தற்போதைய அனர்த்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இறுதி கட்டத்துக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் 16 ம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ அறிவித்துள்ளார்.
மேலும் , அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் சூழ்நிலையை மதிப்பீடு செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கல்வி அமைச்சு கூறியுள்ளது.
எனினும், நாட்டின் நிலைமை மறுபரிசீலனை செய்யப்பட்டு, பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதியில் ஏதேனும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டால் அது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

