Monday, December 1, 2025 11:11 pm
இலங்கைத்தீவில் டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அழிவுகள் மற்றும் மீள் கட்டுமாணம் தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திரமோடி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவுடன் தொலைபேசியில் இன்று திங்கட்கிழமை உரையாடியுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள உயிர் இழப்புகள் – பேரழிவுகளுக்கு பிரதமர் மோடி, முதலில் தனது இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துள்ளார்.
இந்த நெருக்கடியான நேரத்தில் இலங்கை மக்களுக்கு இந்திய மக்கள் உறுதியான ஒற்றுமையுடனும் ஆதரவுடனும் நிற்பதாகவும் மோடி சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், பேரழிவைத் தொடர்ந்து இந்தியா, இலங்கை மக்களுக்கு வழங்கிய உதவிக்கு தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மீட்புக் குழுக்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை விரைவாக அனுப்பியமைக்கு பாராட்டும் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரணம் வழங்கும் தற்போதைய சாகர் பந்து (Operation Sagar Bandhu) நடவடிக்கையின் கீழ், இலங்கைக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை பிரதமர் மோடி, ஜனாதிபதி அநுரவிடம் உறுதியளித்தார்.
இந்தியாவின், மறுவாழ்வு முயற்சிகள் பொதுச் சேவைகள் எனப்படும் தூரநோக்குப் பார்வையான விஷன் மஹாசாகர் (Vision MAHASAGAR) மற்றும் ‘முதலில் பொறுப்புக்கூறுபவர்’ (First Responder) என்ற அதன் அமைக்கப்பட்ட கொள்கைக்கு ஏற்ப, பொது சேவைகளை மீண்டும் ஆரம்பித்து, பாதிக்கப்பட்ட பிராந்தியங்கள் முழுவதும் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டங்களுக்கு வரும் நாட்களில் தேவையான அனைத்து உதவிகளை இந்தியா வழங்கும் என்று நரேந்திரமோடி உறுதிப்படுத்தினார்.

