Monday, December 1, 2025 2:59 pm
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
இதனால் இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
அதன்படி, இன்று திங்கட்கிழமை (01) சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 4,238 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
இதற்கமைய , கடந்த நவம்பர் மாதம் 25 ம் திகதி இருந்த விலையுடன் ஒப்பிடும் போது இலங்கையில் தங்கத்தின் விலை 5,500 ரூபாவால் அதிகரித்துள்ளது.
இன்றைய திகதிக்குள் தங்கத்தின் விலை 2,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
கொழும்பு, செட்டியார் தெரு தங்கச் சந்தையில் 22 கரட் தங்கத்தின் விலை 314,700 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கடந்த நவம்பர் மாதம் 25 ஆம் திகதி 336,000 ரூபாவாக இருந்த 24 கரட் தங்கத்தின் விலை 342,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

