Monday, December 1, 2025 2:26 pm
இலங்கைக்கான மேலதிக மனிதாபிமான உதவிகளுடன் இந்திய கடற்படைக் கப்பல் INS சுகன்யா திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தனது எக்ஸ் சமூக வலைத்தள கணக்கில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஏற்கனவே இந்திய அரசாங்கத்தின் சார்பாக இந்திய கடற்படைக் கப்பல்களான INS விக்ராந்த் மற்றும் INS உதயகிரி ஆகியவை கடந்த 28 ஆம் திகதி நிவாரணப் பொருட்களுடன் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்திய மீட்பு பணியாளர்களும் இலங்கையில் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கைதீவை தாக்கிய டித்வா புயலினால் மண்சரிவுகள் மற்றும் வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகளுக்காக இலங்கையுடன் இணைந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் படைகள் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

