Monday, December 1, 2025 2:04 pm
அனர்த்தம் இடம்பெறும் பகுதிகளில் பொதுமக்கள் ட்ரோன்களைப் பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை விமானப்படை வலியுறுத்தியுள்ளது.
ட்ரோன்களை பறக்கவிடும் செயற்பாடுகள் முக்கியமான மீட்பு விமானப் பயணங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து ட்ரோன்களின் புறப்படுதல் (take-offs) மற்றும் தரையிறக்கங்கள் (landings) ஆகிய விபரங்கள் முன்கூட்டியே 0112343970, 0112343971 அல்லது 115 இலக்கங்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

