Monday, December 1, 2025 12:15 pm
இலங்கையில் அதிதீவிர வானிலையினால் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை மக்களுக்கு உதவும் நோக்கத்தில் சீன அரசாங்கம் இலங்கைக்கு 100,000 அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
சீன செஞ்சிலுவை சங்கம் அவசர நிதி உதவியாக 100,000 அமெரிக்க டொலர் தொகையை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திடம் வழங்கியதாக இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.
அத்துடன் அனர்த்த நிவாரணப் பணிகளை வலுப்படுத்தும் நோக்கத்தில் இலங்கையில் உள்ள சீன வர்த்தக சம்மேளனம் மற்றும் வெளிநாட்டு சீன சங்கம் ஆகியன இணைந்து நன்கொடை திட்டங்களை ஆரம்பித்துள்ளன. இந்த இரு அமைப்புகளும் இணைந்து அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் 10 மில்லியன் இலங்கை ரூபாயைத் திரட்டியுள்ளன.

