Monday, December 1, 2025 12:02 pm
அதிதீவிர வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக உயர்ந்துள்ளது.
366 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கண்டி மாவட்டத்தில் 88 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 75 பேரும், பதுளை மாவட்டத்தில் 71 பேரும், குருணாகலில் 37 பேரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோன்று கண்டி மாவட்டத்தில் 150 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 62 பேரும், பதுளையில் 53 பேரும் காணாமல் போயுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
25 மாவட்டங்களில் 318,252 குடும்பங்களைச் சேர்ந்த 1,156,860 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
1,529 பாதுகாப்பு தங்குமிடங்களில் 59,266 குடும்பங்களைச் சேர்ந்த 209,568 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

