Monday, December 1, 2025 12:03 pm
நாட்டில் நிலவிய இயற்கை பேரழிவை அடுத்து நாடளாவிய ரீதியில் லிட்ரோ எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து லிட்ரோ நிறுவனம் ‘சந்தையில் போதுமான எரிவாயு கையிருப்பில் உள்ளதாகவும் நிரப்பும் நடவடிக்கைகள் தடையின்றி இடம்பெற்று வருவதாகவும்’ அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
போக்குவரத்து சிரமங்கள் இல்லாத பகுதிகளில் எரிவாயு விநியோகம் வழமை போன்று நடைபெறுவதாகவும், வீதிச் சிரமங்கள் நிலவும் பகுதிகள் வழமைக்குத் திரும்பியவுடன் அப்பகுதிகளுக்கும் எரிவாயு விநியோகத்தை வழங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உங்கள் பிரதேசத்தின் தற்போதைய எரிவாயு விநியோகம் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள 1311 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறும் லிட்ரோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

