Monday, December 1, 2025 10:52 am
மரக்கறிகளின் விலைகளில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டள்ளது. இவ்வாறாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் மொத்த விலைகள் உயர்ந்துள்ளன.
ஒரு கிலோகிராம் கரட் ரூபாய் 700 முதல் ரூபாய் 1000 வரை விற்பனை செய்யப்படுகிறது. போஞ்சி, லீக்ஸ் போன்ற மரக்கறிகள் 500 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை அதிகரித்துள்ளன.
இதுவரை காலமும் எதிர்நோக்காத அளவு அனர்த்த நிலைமையை இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ளது. “டித்வா” புயலின் கோரத் தாண்டவத்தினால் இலங்கையின் நிலை மோசமடைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ள அபாயங்களும், மண்சரிவுகளும் இதனால் எங்கு பார்த்தாலும் மரண ஓலங்களுமாக இலங்கை மாறியுள்ளது.
இந்த புயலின் தாக்கத்தினால் வயல் நிலங்கள், விவசாய நிலங்கள் மூழ்கிய நிலையில் மரக்கறிகளின் விலையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

