Thursday, November 27, 2025 10:03 am
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71 ஆவது பிறந்த தினம் நேற்று புதன்கிழமை நல்லூரில் கொண்டாடப்பட்டது.
நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அமைந்துள்ள நினைவாலயத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது பொங்கல் பொங்கி மக்களுக்கு பரிமாறப்பட்டதோடு கேக், இனிப்பு மற்றும் மர கன்றுகள் உள்ளிட்டவையும் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்தநாள் நிகழ்வு நேற்று காலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


