Wednesday, November 26, 2025 12:10 pm
அம்பலாங்கொடை தேவாலய நிர்வாகக் குழுவின் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரும், சந்தேக நபர் தப்பிச் செல்ல உதவிய மற்றொரு நபருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் மீட்டியாகொடையைச் சேர்ந்தவர் எனவும், தப்பிச் செல்ல உதவியதாக கைதானவர் கதிர்காமத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

