Sunday, November 23, 2025 3:06 pm
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக 16.6 மில்லியன் ரூபாய் அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இதுவரை 50 பேரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளது.
குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக தற்போது இங்கிலாந்தில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழு இந்த வாரம் லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் நான்கு ஊழியர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.
இந்தக் குழு நாளை இலங்கைக்குத் திரும்ப உள்ளது. அவர்கள் நாடு திரும்பியதும் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி விக்ரமசிங்கவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் குழு இந்த வாரம் சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவைச் சந்தித்து தங்கள் கட்சிக்காரர் மீதான விசாரணையின் முன்னேற்றம் குறித்து விசாரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

