Sunday, November 23, 2025 7:54 am
ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக சூடான் மத்திய கிழக்கில் ஒரு மாதத்திற்குள் ஏறத்தான 23 குழந்தைகள் இறந்துள்ளனர், சூடான் நாட்டின் இராணுவத்திற்கும் துணை இராணுவக் குழுவிற்கும் இடையே கடுமையான போர் நடைபெறுவதால் மனிதாபிமான பணிகளை முன்னெடுக்க முடியாதுள்ளதாக சூடான் மருத்துவ குழு ஒன்று தெரிவித்துள்ளது.
30 மாதங்களுக்கும் மேலான பேரழிவுகரமான போரினால் பஞ்சம் பரவிவரும் வடகிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் மனிதாபிமான நிலைமை மோசமடைது வருகிறது. சூடான் கோா்டோஃபான் பகுதியில் 23 குழந்தைகளின் மரணம். அங்கு நிலவும் உணவு பஞ்சத்தை எடுத்துக் காட்டுவதாக ஏபிநியூஸ் (apnews) தெரிவித்துள்ளது.
1700 குழந்தைகள் ஊடச்சத்துக் குறைபாட்டினால், உயிருக்காக போராடிக் கொண்டிருப்பதாகவும், மருத்துவ உதவிகளை வழங்க முடியாதுள்ளதாகவும் சூடான் மருத்துவர் குழு கவலை வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 2023 இல் சூடானில் பெரும் போர் ஆரம்பமானது. இராணுவத்திற்கும் சக்திவாய்ந்த துணை இராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும் இடையிலான அதிகாரப் போராட்டம் தலைநகர் கார்ட்டூம் மற்றும் சூடானின் ஏனைய இடங்களில் வெளிப்படையான போராக வெடித்தது.
ஐநா எண்ணிக்கையின் பிரகாரம் அழிவுகரமான போர் 40,000 இற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் உதவிக் குழுக்கள், இது ஒரு குறைவான எண்ணிக்கை என்றும், உண்மையான எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கலாம் எனவும் கூறுகின்றன.
இது உலகின் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கியது, 14 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, இதனால் நோய் பஞ்சம் அதிகரித்துள்ளது.
சர்வதேச பட்டினிகள் பற்றி ஆய்வு செய்யும் நிபுணர்களின் கூற்றுப்படி, செப்டம்பர் மாதம் கோா்டோஃபான் மற்றும் டார்ஃபரின் மேற்குப் பகுதியில் சுமார் 370,000 பேர் பஞ்சத்தில் தவிக்கின்றனர். மேலும் 3.6 மில்லியன் மக்கள் இரண்டு பிராந்தியங்களிலும் பஞ்சம் நிலவினாலும், அங்கு உயிர்வாழ்வதற்குரிய உணவுகளை மக்கள் வேறு வழிகளில் பெறுவதாகவும் அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முற்றுகையிடப்பட்ட நகரமான கடுக்லி மற்றும் டில்லிங் நகரத்தில் ஓக்ரோபர் 20 ஆம் திகதி முதல் நவம்பர் ஆம் திகதி 20 வரை குழந்தைகளின் இறப்புகள் பதிவாகியுள்ளதாக மோதல்களைக் கண்காணிக்கும் நிபுணர்களின் அமைப்பான சூடான் மருத்துவர் குழு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

