Friday, November 21, 2025 1:12 pm
நுகேகொடையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள அரசுக்கு எதிரான எதிர்ப்பு பேரணியில் பாரிய சத்தத்துடன் இயங்கிய ஒலிபெருக்கிகள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளது.
மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவிருக்கும் பொதுப் பேரணியில் ஒலி பெருக்கி அமைப்புகளைப் பயன்படுத்துவது தொடர்பாக இலங்கை பொலிஸார் சிறப்பு நிபந்தனைகளை விதித்தனர்.
போராட்ட பகுதியில் பல க.பொ.த உயர்தரப் பரீட்சை மையங்கள் அமைந்துள்ளமையினால் அதிக ஒலி எழுப்பும் ஒலி அமைப்புகளைப் பயன்படுத்துவது பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்தநிலையில் நுகேகொடையில் பேரணிக்காக தயார் செய்யப்பட்டிருந்த ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

