Thursday, November 20, 2025 10:23 pm
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் அல்-கொய்தா தடைகள் குழுவின் தலைவர், ஆப்கானிஸ்தான் தலிபான் அரசாங்கத்தின் ஆதரவில் இயங்கும், பாகிஸ்தானுக்கு எதிரான தெஹ்ரிக்-இ-தலிபான் (Taliban-backed Tehrik-e-Taliban Pakistan -TTP) என்ற தீவிரவாதக் குழுவின் மூலம் எழும் “கடுமையான அச்சுறுத்தல்” குறித்து கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக ஜியோநியூஸ் (GeoNews) தொலைக்காட்சி இன்று வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தீவிரவாத குழு பல உயர்மட்ட தாக்குதல்களை, ஆப்கானிஸ்தான் நாட்டின் குறித்த ஒரு பிரதேசத்தில் இருந்து, பாக்கிஸ்தானில் தாக்குதல்களை நடத்தி வருவதாக, சுட்டிக்காட்டி, எச்சரித்துள்ளார் என்று அந்த தொலைக் காட்சி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டென்மார்க் அரசாங்கத்தின் ஐநாவுக்கான துணை நிரந்தரப் பிரதிநிதி, சாண்ட்ரா ஜென்சன் லாண்டி, பாதுகாப்புச் சபைக்கு வழங்கிய விளக்கத்தில், சுமார் 6,000 போராளிகளைக் கொண்ட தெஹ்ரிக்-இ-தலிபான் என்ற தீவிரவாதக் குழு, தலிபான் அதிகாரிகளிடமிருந்து “தளபாடங்கள் உள்ளிட்ட கணிசமான ஆதரவைத் தொடர்ந்து பெறுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
15 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா பாதுகாப்புச் சபை, டேஷ்/அல்-கொய்தா தடைகள், ஐ.நா.வின் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள் மற்றும் பேரழிவு ஆயுதங்கள் அரசு தீவிரவாதக் குழுக்களை சென்றடைவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தது மேற்கொண்ட மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பித்தார்.
இந்த அறிக்கைக்கு பதிலளித்த ஐ.நா.வுக்கான பாகிஸ்தானின் துணை நிரந்தரப் பிரதிநிதி உஸ்மான் ஜாடூன், பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு முன்னணி நாடாக பாகிஸ்தானின் பங்கை மீண்டும் உறுதிப்படுத்தினார்,
பாகிஸ்தானில் ஏற்பட்ட “அநியாய உயிரிழப்புகளை” அவர் நினைவு கூர்ந்தார். 80,000 க்கும் அதிகமான உயிர் இழப்புகள் மற்றும் பில்லியன் கணக்கான பொருளாதார இழப்புகள் ஏற்பட்டதாக கூறி அவர், கவலை வெளியிட்டார்.
ஐஎஸ்ஐஎல்-கே, டிடிபி மற்றும் அதன் துணை நிறுவனங்கள், பிஎல்ஏ மற்றும் அதன் மஜீத் படைப்பிரிவு போன்ற அமைப்புகள், ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்த்து பாகிஸ்தானின் பாதுகாப்புப் படைகள் போராடி வருவதாகவும் கூறினார்.
இந்த தீவிரவாத தாக்குதலினால் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க சட்ட ஒழுங்கும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் சட்ட மா அதிபர் மேற்கொள்வதாகவும் அவர் கூறினார்.
பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் சீனப் பிரதிநிதியும் கருத்து வெளியிட்டார். பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் எதிர்கொண்டு வரும் தீவிரவாதத் தாக்குதல்களின் தன்மை குறித்தும், பயங்கரவாத தாக்குதல்களை நிறுத்த வேண்டிய பின்னணிகள் பற்றியும் சீனப் பிரதிநிதி வெளிப்படுத்தினார்.

