Thursday, November 20, 2025 3:58 pm
நாளொன்றுக்கு சுமார் 25 சைபர் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் இலங்கையில் பதிவு செய்யப்படுவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் 2026 வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பதிவு செய்யப்படும் பெரும்பாலான முறைப்பாடுகள் வட மாகாணத்தில் பதிவாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்தில் 24 சைபர் குற்றச் சம்பவங்களும், 2021 ஆம் ஆண்டில் 577 சைபைர் குற்றச் சம்பவங்களும், 2022 ஆம் ஆண்டில் 654 சைபர் குற்றச் சம்பவங்களும், 2023 ஆம் ஆண்டில் 472 சைபர் குற்றச் சம்பவங்களும், 2024 ஆம் ஆண்டில் 1539 சைபர் குற்றச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
2025ஆம் ஆண்டின் ஒக்டோபர் 1 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் 2368 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சைபர் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக நாட்டின் பல மாவட்டங்களில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ் கணினி குற்றப் புலனாய்வு துணைப் பிரிவுகள் நிறுவப்பட்டுள்ளன என்பதையும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.

