Thursday, November 20, 2025 4:19 pm
கொழும்பு கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ‘ஐஸ்’ போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர் என்று கொழும்பு குற்றப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சந்தேகநபர் நேற்று புதன்கிழமை ஹசலக, கொலொங்கொடை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
கைதானபோது, இவரிடம் இருந்து 12 கிராம் 300 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இச் சந்தேகநபர் 39 வயதுடையவர் எனவும், கடுவெல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சென்ற நவம்பர் மாதம் 7ஆம் திகதி கொட்டாஞ்சேனையில் வாகனம்ஒன்றில் வந்த நபரொருவர் துப்பாக்கியால் சுட்டு இளைஞர் ஒருவரை கொலையைச் செய்திருந்தார்.
கொலைச் சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வரும் நிலையில். இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

