Thursday, November 20, 2025 9:09 am
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று புதன்கிழமை பிற்பகல் விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்யன், எம்.ஏ சுமந்திரன், சிறிநேசன், சிவஞானம் ஸ்ரீதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்
இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக இன்று ஜனாதிபதியுடன் இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இங்கு மாகாண சபைத் தேர்தல் மற்றும் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது
திருகோணமலை பிரதேசத்தில் மதங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அதனை தடுப்பதற்காக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார்.
தமிழ் மக்கள் சார்ந்த பல விடயங்கள் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டதாகவும், நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டு வருவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கருத்து வெளியிட்டுள்ளனர் எனவும் எம்.ஏ சுமந்திரன் கருத்து வெளியிட்டுள்ளார்.

