Wednesday, November 19, 2025 2:40 pm
2025ம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் 105 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு பதிவாகிய 105 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களினால் 57 பேர் உயிரிழந்துள்ளதுடன் 56 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தினால் வேறுவேறுபட்ட குழுக்களிடையே உள்ள மோதல்களினால் இந்த துப்பாக்கிசூட்டு சம்பவங்கள் அதிகளவில் பதிவாகின்றன. அதுமட்டுமன்றி பாதாள உலக கும்பல்களுக்கு இடையிலான மோதல்கள் காரணமாகவும் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகின்றன.

