Wednesday, November 19, 2025 12:31 pm
அம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்பட்ட தீயில் சிக்கி பிறந்து ஒரு நாளேயான குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத்தில் அர்வல்லி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் குழந்தைக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மேலதிக சிகிச்சைக்காக அம்புலன்சில் அகமதாபாத்திற்கு குறித்த குழந்தை கொண்டு செல்லப்பட்டது.
மோடசா – தன்சுரா வீதியில் நள்ளிரவு அம்புலன்ஸ் வாகனம் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென தீப்பற்றியது. வண்டியின் பின்புறத்தில் தீப்பிடிப்பதைக் அவதானித்த ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தியுள்ளார்.
ஓட்டுநர் உள்பட 3 பேர் கீழே இறங்கியுள்ளனர். வாகனத்தில் தீ பரவியதை அடுத்து பின்புறத்திலிருந்த நான்கு பேரும் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் வாகனத்தில் பயணித்த பிறந்து ஒருநாளே ஆன பச்சிளம் குழந்தை, குழந்தையின் தந்தை, வைத்தியர் உட்பட 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறியும் பணியில் தடயவியல் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.

